Temple History

PRESIDENT

Shri. ANANDA KRISHNA SITHAMBARAM

President of the temple committee Shri. ANANDA KRISHNA SITHAMBARAM told the history of the temple In 1890, the Malaysian Hindus realized that they need a temple to worship. They believed in the Indian proverb, that One should not stay in a place where there is no temple.So they decided to have a temple and went to consult His Holiness the Jira of Trimalai. He advised them that "vikram" worship is rather complicated and advised them to do "patha" poojas. for Lord Perumal.

This form of worship was highly honoured and appreciated by the vainava group.This form of worship had been performed by Gajendra (the Holy Elephant) and also by the two brothers of Lord Rama, Barathan and Bisman. It is known that Swamy Desingam had also performed this rites. The Malaysian devotees felt that a "vikram" worship would be a better choice.So they went to see the great Holiness Jira Swamy and informed him of their desire to do a "vikram" worship.His Holiness advised them that there a lot of rituals which may cause a lot of difficulties.

The Malaysian devotees pleaded with him and he after seeing their determination gave his consent. He also gave them a silver "vikram" which he worshiped.

திருத்தல வரலாறு

சுமார் 1890ல் மலேசிய பக்தர்கள் ஒன்றுகூடி கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியையும் ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்ற ஒளவையின் கூற்றுப் படியும் மலேசிய திருநாட்டில் திருக்கோயில் அமைக்க முயற்சித்து, அதன் அடிப்படையில் ஆலோசனைகளைப் பெற திருமலை பெரிய ஜீயரை அனுகினர். இறைவனின் விக்ரஹம் அல்லாத இறைவனின் பாதுகையை வைத்து பூஜிக்க ஜீயர் ஸ்வாமிகள் அனுகிரகித்தார். அவ்வாறு பாதுகை பூஜையென்பதை வைணவ சித்தாந்தம் மிகப்பெருமையாக போற்றுகிறது. கருதயுகத்தில் கஜேந்திரன் என்கின்ற யானை இறைவன் திருவடி பற்றி இன்றளவும் இதிகாசங்களில் போற்றப்படுகிறது. த்ரேதாயுகத்தில் பரதன் விபீஸனன் ஆகியோர் எம்பெருமான் திருவடியைப் பற்றி பேருபெற்றனர். துவாபரயுகத்தில் த்ரௌபதை கண்ணன் திருவடி பற்றி உயர்ந்தாள். கலியுகத்தில் ஸ்வாமி தேசிகள் எம்பெருமான் திருவடியைப் பற்றி பாதுகாசகஸ்ரம் சமர்பித்து வரலாற்றில் பேசப்பட்டார். அதுபோல் மலேசிய கிள்ளான் பக்தர்கள் எம்பெருமானுடைய திருவடியை பூஜித்தால் எம்பெருமான் கருணை பொழிந்து இத்திருத்தலத்திற்கு திருமேனியுடன் (விக்ரகமாக) எழுந்தளி சேவை சாதிக்க திருவுள்ளம் கொண்டார். அப்போது எம்பெருமான் பக்தர்களின் பக்தியை சோதிக்க எண்ணி திருவிளையாடல் புரிந்தார்.

மலேசிய பக்தர்கள் மீண்டும் திருமலை பெரிய ஜீயரை அனுகி விக்ரஹ வழிபாட்டிற்கு பெருமாள் திருவுள்ளம் கொண்ட சமாசாரத்தை கூறி தெண்டம் சமர்ப்பித்தனர். அப்போது ஜீயர் ஸ்வாமிகள் விக்ரஹ வழிபாட்டில் பாவம் நேர்ந்தால் உங்களுக்கு நரகம் கிட்டும் என்று கூறினார். அதற்கு பக்தர்கள் பவ்யமாக ஸ்வாமியிடம் எங்கள் ஆச்சாரியார் இராமானுஜர் சித்தாந்தத்தின்படி நாங்கள் நரகம் போனாலும் பரவாயில்லை வரும் சந்ததியினர் பயனடைய வேண்டும் என்று தெரிவித்தனர். ஜீயர் ஸ்வாமிகளும் பக்தர்களின் பக்தியைக் கண்டு தான் பூஜித்து வந்த வெள்ளி விக்ரஹத்தை சமர்பித்து அனுகிரகித்தார். இதனால் இத்திருத்தலம் திருகோஷ்டியூருக்கு நிகரானதாக போற்றப்படுகிறது.