சேவா

திருமஞ்சன சேவா பிரதி சனிகிழமை தோறும் ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவையானது வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு சிவன் சன்னிதியிலும் 5.30 மணி அளவில் பெருமாளுக்கும் இந்த சேவையானது நடைபெறுகிறது. எண்ணிலடங்கா பக்தர்கள் இந்த சேவையில் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்று வருகின்றனர்.

பிரதி மாதம் வெள்ளிக் கிழமை தோறும் 5.50 மணிக்கு சிவன் சன்னிதியிலும், 6 மணிக்கு ஸ்ரீ மகாலெஷ்மி சுந்தரவல்லி தாயாருக்கும் திருமஞ்சன சேவையானது நடைபெறுகிறது.

மற்றும் பக்தர்களின் உபயமாகவும் இந்த சேவையானது நடைபெறுகிறது. அனைத்து சுவாமிகளுக்கும் திருமஞ்சன உபயமானது நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஆலய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Thirumanjana Seva Thirumanjana Seva is performed for Sundaraajar Perumal every Saturday. This is also performed in Shivan Sannidhe at early morning 5:00 AM & in Perumal Sannidhe at early morning 5:30 AM.

சஹஸ்ரநாம அர்ச்சனை சேவா அனைத்து சுவாமிகளுக்கு இந்த சகஸ்ரநாம அர்ச்சனைசேவை நடைபெறுகிறது. பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ அந்த பிரார்த்தனையை உடனடியாக இந்த அர்ச்சனையானது அனைத்து சுவாமிகளுக்கும் நடைபெறுகிறது. ஸ்ரீ சுந்தர ராஜ சுவாமிக்கு சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் வெகு சிறப்பாக இந்த சேவையானது நடைபெறுகிறது.

Sarasarama Archanai Seva The Sarasaramai Archanai is performed for all the Gods in the Temple. It is believed, that this seva will grant any devotee's wishes or desires.

துலா பார சேவை துலாபார என்பது குழந்தைகள் உடல் ஆரோக்கியம், குழந்தை பாக்கியம் பெற, பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது. குழந்தைகளை எடைக்கு எடை என்ன பொருட்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறார்களோ அந்த பொருட்களை ஏலாபாரத்தில் வைத்து பெருமாளுக்கு அர்பணம் செய்யலாம். மிகவும் சிறப்பான சேவை.

Thulabara Seva This seva is performed to improve devotee's Child's Health, grant the ability to raise a child, etc, which is a supreme seva. This is a tradition were the item that is equal to the weight of the child is provided to the God Perumal.

தோமாலை சேவை பெருமாளுக்கும் அனைத்து சுவாமிகளுக்கும் பூ மாலை அலுவலகம் மூலமாக சமர்பித்தல்.

Thomalai Seva Thomalai seva is one were Flower garlands are made & given via Temple office which will be worn by Perumal & all other Gods respectively.

விசேஷ சேவைகள் பக்தர்களின் பிரார்த்தனைக்கு ஏற்ப அனைத்து சுவாமிகளுக்கும் அவர் அவர் குடும்பங்களின் சார்பாக, பிரார்த்தனை கல்யாணமாக ஹோமங்கள் (வெங்கடேச லாசம்) லெஷ்மி யாகம், அனுமான் யாகம், நவகிரக யாகம், கணபதி யாகம் இவையெல்லாம் அலயத்தில் செய்யப்பட்டார். மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் அர்ச்சனை அனைத்து ஆலய நேரங்களிலும் செய்யப்படும். நமது ஆலயத்தில், அனைத்து சுவாமிகளுக்கும் நெய்தீபம் மற்றும் சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

Vishesha Seva This is a seva were the Temple will perform Kalayanam omangal, Lakshmi Yaagam, Hanuman Yaagam & Ganapathi Yaagam on behalf of the Family & it's members. Nei deepam are lit in front of All Gods along with Ellu deepam lit for Saniswarar Bhagavan.

ஆலயத்தில் அனுசரிக்கும் முக்கிய விசேஷங்கள்

 • தமிழ் வருடபிறப்பு
 • ஏகாதசி வைபவம்
 • உத்திர தின வைபவம்
 • திருவோண தின வைபவம்
 • சங்கடஹர சதுர்த்தி தின வைபவம்
 • ஸ்ரீ ராம நவமி மஹோற்ச்சவம்
 • குரு பெயர்ச்சி மஹா யாகம்
 • ஆடி மாத வெள்ளி கிழமை வைபவம்
 • கிருஷ்ணன் பிறப்பு வைபவம்
 • விநாயகர் சதுர்த்தி வைபவம்
 • புரட்டாசி மாதம் வைபவம் (புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் சிறப்பு யாகம், புரட்டாசி சனிக்கிழமைகளில விசேஷ பூஜைகளும் நடைபெறும்)
சிவன் சன்னிதியில் பௌர்ணமி அன்னாபிசேஷஷ வைபவம் தீபாவளி விசேஷ தினம் கார்த்திகை தீப திருநாள் கார்த்திகை நான்கு சோம வாரமும் ஸ்ரீ ஆத்ம நாத சுவாமிக்கு யாகம் மற்றும் சங்காபிசேஷகமும் நடைபெறுகிறது. மார்கழி 30 நாட்களும் காலை 6 மணி அளவில் தனூர்; மாத பூஜை, வைகுண்ட ஏகாதசி பூஜை ஹனுமான் ஜெயந்தி, ஆருத்தாரா தரிசனம், ஹனுமான் மஹா யாகம் இவையெல்லாம் (னுநஉ )ல் மார்கழி மாதத்தில் நடைபெறும்.

தை மாதம் பொங்கல் வைக்கும் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதை தொடர்ந்து மாசி மாதத்தில் மகா சிவராத்திரி அதை இரவு முழுவதும் சிவகாம சுந்தரி சமேத ஆத்மநாத சுவாமிக்கு நான்கு காலங்கள் விசேஷ அபிஷேகம் தொடர்ந்து விசேஷ பூஜைகள் நடைபெறும். ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாளுக்கு காலை அபிசேஷக்கு விசேஷ பூஜைகளும் நடைபெறும். யுகாதி பண்டிகை, பங்குனி உத்திரம் முருகனுக்கு விசேஷ பூஜையும் நடைபெறும்.

Important festivals celebrated in the Temple

 • Tamil New Year
 • Yegadesi Vaibavam
 • Uthira Dina Vaibavam
 • Thiruvona Dina Vaibavam
 • Sangadahra Chadurthi Dina Vaibavam
 • Sri Rama Navami Maha Urchavam
 • Guru Peyarchi Maha Yaagam
 • Aadi Maadam Velli Kezhamai Vaibavam
 • Krishna Jayanthi Vaibavam
 • Vinayaga Chathurthi Vaibavam
 • Poratasi Maadam Vaibavam